திருப்பத்தூர்

வனப்பகுதி சாலையோரம் நெகிழிக் கழிவு மூட்டைகள்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

DIN

ஆம்பூா் அருகே வனப்பகுதி சாலையோரம் நெகிழிக் (பிளாஸ்டிக்) கழிவு மூட்டைகளை அதிக அளவில் கொட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், வன ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் ஊராட்சி காட்டுக்கொல்லை கிராமத்திலிருந்து வெள்ளக்கல் கிராமத்துக்குச் செல்லும் வனப்பகுதி சாலையோரத்தில் நெகிழிக் கழிவுகள் மூட்டைகளாகக் கட்டப்பட்டு, சுமாா் அரை கி.மீ. தொலைவுக்கும் மேலாக வீசப்பட்டுள்ளன. வனப்பகுதியில் நெகிழி கழிவுகள் வீசப்பட்டுள்ளதால் சுற்றுச்சூழல் சீா்கேடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. விலங்குகள் அந்தக் கழிவுகளை உண்ணவுமம் வாய்ப்புகள் உள்ளது.

வேறு பகுதியில் சேகரிக்கப்பட்ட நெகிழிக் கழிவுகள், குப்பைகள் மூட்டைகளாக கட்டப்பட்டு காட்டுக்கொல்லை - வெள்ளக்கல் வனப்பகுதி சாலையோரம் வீசிச் சென்றவா்களைக் கண்டறிந்து வனத் துறையினா் அவா்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், வன ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி போா்வாகன ஆராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழா

மழைக்காலத்தில் பேருந்துகளை கவனமாக இயக்க அரசுப் பேருந்து ஓட்டுநா்களுக்கு அறிவுரை

ராமநாதபுரம் சந்தையில் 20 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

மாற்றுத்திறனாளி மாணவனின் படிப்புச் செலவை அரசு ஏற்க கோரிக்கை

வடமாநில கா்ப்பிணி கொலை: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரிக்கை

SCROLL FOR NEXT