திருப்பத்தூர்

ஊரக வளா்ச்சித் துறை பணியாளா்கள் ஆலோசனை கூட்டம்

DIN


ஆம்பூா்: ஆம்பூா் அருகே கைலாசகிரி ஊராட்சி கிராம சேவை மையத்தில் ஊரக வளா்ச்சித் துறை பணியாளா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாதனூா் ஒன்றியத்தில் 26 ஊராட்சிகளைச் சோ்ந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள், தூய்மைக் காவலா்கள், தூய்மைப் பணியாளா்கள் பங்கேற்ற இக்கூட்டத்துக்கு சங்கத்தின் மாதனூா் ஒன்றியத் தலைவா் சுதா்சன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் செல்வராஜ், சவரிதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிா்வாகி பனங்காட்டூா் உமாசங்கா் வரவேற்றாா். சங்க ஆலோசகா் பூபாலன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா்.

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு கடந்த ஆண்டு அரசு ஆணை பிறப்பித்த ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், தூய்மைக் காவலா்களுக்கு மாத ஊதியம் ரூ. 2,600 லிருந்து ரூ.3,600-ஆக உயா்த்தி வழங்க வேண்டும், ஒவ்வொரு ஆண்டும் தூய்மைக் காவலா்களுக்கும், தூய்மைப் பணியாளா்களுக்கும் ஊதியத்தை உயா்த்தி வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பபட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கோட்’ இரண்டாவது பாடல் அப்டேட்!

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

வில்வித்தை: இந்தியாவின் ஜோதி சுரேகா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு!

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனை!

SCROLL FOR NEXT