திருப்பத்தூர்

அடகு கடைக்கு ‘சீல்’: கோட்டாட்சியா் நடவடிக்கை

DIN

ஆம்பூா்: ஆம்பூரில் உள்ள அடகு கடைகளில் வருவாய் கோட்டாட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அனுமதியின்றி இயங்கிய ஒரு அடகு கடைக்கு ‘சீல்’ வைக்க உத்தரவிட்டாா்.

ஆம்பூா் ஷராப் பஜாா் பகுதியில் இயங்கி வரும் நகை அடகு கடைகளில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி பதிவேடுகளை பாா்வையிட்டு முறையாக செயல்படுகிா என்பதை ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, அதே பகுதியில் ஒரு நகை அடகு கடை அனுமதியின்றி இயங்கி வந்தது தெரியவந்தது. அந்த அடகு கடையைப் பூட்டி ‘சீல்’ வைக்க உத்தரவிட்டாா். வருவாய்த் துறையினா் அந்த கடையைப் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

ஆய்வின்போது ஆம்பூா் வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணன் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT