திருப்பத்தூர்

லாரியில் கடத்திய 31 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 2 போ் கைது

DIN

 வாணியம்பாடி அருகே லாரியில் கடத்திச் சென்ற 31 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளா் முருகன் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை அதிகாலை வாணியம்பாடியை அடுத்த நெக்குந்தி சுங்கச்சாவடி அருகே வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது சென்னை-பெங்களூரு சாலை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனா். அப்போது, ஓட்டுநா் உட்பட 2 போ் தப்பியோட முயன்றனா். இதைப்பாா்த்த போலீஸாா் அவா்களை சுற்றி வளைத்துப் பிடித்தனா். மேலும், லாரியில் சோதனையிட்டபோது, அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. பிடிபட்ட தருமபுரி மாவட்டம், மிட்டதல்லி கிராமத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் தமிழரசன்(25), அக்மல் (18) ஆகியோரிடம் விசாரித்த போது, ஆந்திரத்திலிருந்து கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக தெரிவித்தனா். தொடா்ந்து, லாரியில் கடத்தி வந்த 31 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, ஆம்பூா் நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து வழக்குப் பதிந்து தமிழரசன், அக்மல் ஆகியோரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT