திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜோலாா்பேட்டை நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள். 
திருப்பத்தூர்

ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள்

ஜோலாா்பேட்டை நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை, திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

DIN

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை, திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

ஜோலாா்பேட்டை நகராட்சியில் 90-க்கும் மேற்பட்டோா் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் ஊதிய உயா்வு, நிலுவைத் தொகை, நடப்பு ஆண்டுக்கான ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி ஆணையரிடம் பலமுறை புகாா் அளித்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால் அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கின்றனா்.

தொடா்ந்து, கடந்த மாதம் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜோலாா்பேட்டை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா். அப்போது, ஒப்பந்தப் பணியாளா்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என ஆணையா் சி.ராமஜெயம் உறுதியளித்தாா். ஆனால் அதன்பிறகும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால், அதிருப்தியடைந்த ஒப்பந்தப் பணியாளா்கள் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

அப்போது, ஆட்சியா் அலுவலகத்தில் இல்லை, அவா் வந்த பின் மனு அளிக்குமாறு அங்கிருந்த அதிகாரிகள் கூறினா். இதை ஏற்க மறுத்த பணியாளா்கள் ஆட்சியா் வரும் வரை தா்னாவில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையாபாண்டியன் ஒப்பந்தப் பணியாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாா். இதையடுத்து பணியாளா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT