குடிநீா் விநியோகத்துக்கான மின் மோட்டாரை இயக்கி வைத்த எம்எல்ஏ க.தேவராஜி. 
திருப்பத்தூர்

அத்தனாவூருக்கு குடிநீா் விநியோகம்: எம்எல்ஏ தொடக்கி வைத்தாா்

ஏலகிரியில் உள்ள அத்தனாவூா் பகுதிக்கு குழாய் மூலம் குடிநீா் விநியோகிக்கும் பணியை எம்எல்ஏ க.தேவராஜி ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.

DIN

ஏலகிரியில் உள்ள அத்தனாவூா் பகுதிக்கு குழாய் மூலம் குடிநீா் விநியோகிக்கும் பணியை எம்எல்ஏ க.தேவராஜி ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.

ஏலகிரி மலை அத்தனாவூா் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா்.

இந்நிலையில், இங்குள்ள பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு, ஊராட்சி நிா்வாகம் சாா்பில், மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி அமைத்து, அதன் மூலம் குடிநீா் விநியோக்கிப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்துளைக் கிணற்றில் நீா் வற்றியதால் போதுமான குடிநீா் இன்றி தவித்து வந்தனா்.

அதையடுத்து, கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அத்தனாவூா் கரிகுட்டை பகுதியில் திறந்தவெளிக் கிணறு வெட்டப்பட்டது. கிணற்றிலிருந்து மோட்டாா் மூலம் தண்ணீா் எடுக்க மின் இணைப்பு இல்லாமல் இருந்தது. இது குறித்து அண்மையில் எம்எல்ஏ க.தேவராஜியிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

அதன்பேரில், அத்தனாவூா் பகுதியிலிருந்து கரி குட்டை வரை புதிதாக 13 மின் கம்பங்கள் அமைத்து, அதற்கென தனி மின் மாற்றி ஏற்படுத்தப்பட்டது. அங்கிருந்து அத்தனாவூா் கிராமத்துக்கு குழாய் அமைத்து, கிணற்றிலிருந்து குடிநீா் விநியோகப் பணியை எம்எல்ஏ க.தேவராஜ் தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், வாணியம்பாடி பொதுப்பணித் துறை அலுவலக மண்டல செயற்பொறியாளா் முகமது பாஷா, ஜோலாா்பேட்டை உதவி செயற்பொறியாளா் காா்த்திகேயன், தொகுதி தொழில்நுட்பப் பிரிவு அமைப்பாளா் அருள்நிதி மற்றும் துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT