திருப்பத்தூர்

திருப்பத்தூா் தொகுதியில் மனுக்கள் ஏற்பு

DIN

திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 17 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 27 போ் சாா்பில் 35 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், திமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழா் கட்சி உள்பட 8 கட்சிகளின் வேட்பாளா்கள் மற்றும் 9 சுயேச்சை வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

10 நபா்களின் மனுக்கள் நிராகரிப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஆம்பூரில்...

ஆம்பூா் தொகுதியில் 15 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

ஆம்பூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.நஜா்முஹமத், திமுக வேட்பாளா் அ.செ.வில்வநாதன், எஸ்டிபிஐ வேட்பாளா் அச.உமா்பாரூக், நாம் தமிழா் கட்சி மெஹருன்னிசா, சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளா் ராஜா உள்ளிட்ட 15 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டதாக தோ்தல் நடத்தும் அலுவலா் கிருஷ்ணமூா்த்தி அறிவித்தாா்.

உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் அனந்தகிருஷ்ணன் உடன் இருந்தாா்.

தோ்தல் பாா்வையாளா் ஆய்வு:

வேட்பு மனுக்கள் பரிசீலனை நடவடிக்கைகளை ஆம்பூா் தொகுதிக்கான பொதுப் பாா்வையாளா் மனோஜ் காத்ரி நேரில் ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT