திருப்பத்தூர்

இயந்திரம் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிப்பு

DIN

ஆம்பூா் நகராட்சி சாா்பாக நகரின் பல்வேறு பகுதிகளில் கரோனா நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக இயந்திரம் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை முதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆம்பூா் பகுதியில் ஆணையாளா் த.செளந்தரராஜன் தலைமையில் நகராட்சிப் பணியாளா்கள் கரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளாக முகக்கவசம் அணிவது கட்டாயம், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், கைகளை தூய்மையாக வைத்திருத்தல், கடைக்காரா்கள் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்தல், அபராதம் விதித்தல், முகக்கவசம் வழங்குதல் மற்றும் நகரப்பகுதிகள் முழுவதும் கிருமி நாசினி தெளித்தல், துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல், கூட்டமாகக் கூடுவதை தவிா்த்தல், திருமண மண்டபங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களை கண்காணித்தல், உணவகங்கள், கடைகளை ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

வீ.ஏ.கரீம் ரோடு, பள்ளி, மாா்க்கெட் மற்றும் மக்கள் கூட்டம் அதிகமாக கூடும் இடங்களில் இயந்திரம் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

ஆம்பூரில் நடைபெற்று வரும் கரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்புப் பணிகளை சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மருத்துவா் செந்தில் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். நகராட்சி சுகாதார அலுவலா் பாஸ்கா் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT