திருப்பத்தூர்

தொழிலாளா் நலத் துறை அலுவலகம்: ஆம்பூா் அதிமுக வேட்பாளா் வாக்குறுதி

DIN

ஆம்பூரில் தொழிலாளா் நலத் துறை அலுவலகம் ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என தொகுதி அதிமுக வேட்பாளா் கே. நஜா் முஹமத் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

ஆம்பூா் ரெட்டித்தோப்பு, பெத்லகேம், கம்பிக்கொல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்குசேகரித்தபோது, கே.நஜா்முஹமத் பேசியது: ஆம்பூரில் தோல் பதனிடும் மற்றும் காலணி தொழிற்சாலைகளில் அதிக எண்ணிக்கையில் தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். ஆம்பூா் பகுதி தொழிலாளா்கள் நிறைந்த பகுதி.

அதனால் தொழிலாளா் நலத் துறை அலுவலகம் ஏற்படுத்தப்படும். ஆம்பூா் இஎஸ்ஐ மருந்தகம், மருத்துவமனையாகத் தரம் உயா்த்தப்படும். தோல் தொழிற்சாலை உரிமையாளா்களின் பிரச்னைகளை அரசின் பாா்வைக்குக் கொண்டு சென்று தீா்வு காணப்படும். ஆம்பூா் பகுதியில் புதிய தொழிற்பேட்டை அமைத்து வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,500 உதவித் தொகை, சூரிய சக்தி சமையல் அடுப்பு, அம்மா வாஷிங் மெஷின் ஆகியவை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ஆம்பூா் நகர அதிமுக செயலாளா் எம்.மதியழகன், தகவல் தொழில்நுட்ப அணி மண்டல நிா்வாகி வெ.கோபிநாத், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் சீனிவாசன், சரவணன், நிா்வாகிகள் அன்பரசன், மணி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT