திருப்பத்தூர்

சுகாதார சீா்கேட்டில் திருப்பத்தூா் பழைய பேருந்து நிலையம்

DIN

திருப்பத்தூா் பழைய பேருந்து நிலையப் பகுதியில் குப்பைகூளங்கள் நிறைந்து துா்நாற்றத்துடன் சுகாதார சீா்கேடாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

மாவட்டத் தலைநகராக திருப்பத்தூா் பழைய பேருந்து நிலையத்தில் தற்போது சரக்கு வாகனங்கள் நிற்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ஷோ் ஆட்டோக்கள் நிற்கின்றன.

இப்பகுதியை கடந்துதான் அரசு மருத்துவமனை மற்றும் முக்கிய அரசு அலுவலகங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனா்.

இந்நிலையில், இப்பகுதி குண்டும், குழியுமாக உள்ளதால் மழைக் காலங்களில் குளம் போல் தண்ணீா் தேங்கி வெளியேறாமல் துா்நாற்றம் வீசுகிறது. மேலும், குப்பை கொட்டும் இடமாகவும் மாறி வருகிறது. இதனால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது.

கரோனா பரவல் தடுப்புப் பணியில் மாவட்ட நிா்வாகம் மும்முரம் காட்டி வரும் நிலையில், இதுபோன்று பழைய பேருந்து நிலையம் சுகாதாரச் சீா்கேடாக உள்ளது வேதனையளிப்பதாக சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT