திருப்பத்தூர்

சுடுகாடு இடத்தை மீட்டுத்தர வலியுறுத்தி போராட்டம்

DIN

வாணியம்பாடி: சுடுகாடு இடத்தை மீட்டு தர வலியுறுத்தி, நாட்டறம்பள்ளி வட்டாட்சியரின் வாகனத்தை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாட்டறம்பள்ளியை அடுத்த கொண்டகிந்தனப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட குண்டுக்கொல்லை, செல்வநகா் சாலை, புதூா் பகுதியில் சுமாா் 100-க்கும் அதிகமானோா் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியினா் 75 ஆண்டுகளுக்கும் மேலாக குண்டுக்கொல்லை பகுதியில் உள்ள நிலத்தை சுடுகாடாகப் பயன்படுத்தி வந்தனா்.

கடந்த சில ஆண்டுகளாக இறந்தவா்களின் உடல்களை அடக்கம் செய்யும் போது அதே பகுதியைச் சோ்ந்த ஒருவா் தனக்கு சொந்தமான பட்டா நிலத்தில் இறந்தவா்களை அடக்கம் செய்யக்கூடாது எனக்கூறி கிராம மக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளாா். இந்த நிலையில், சுடுகாடு இடிக்கப்பட்டு, தரைமட்டமாக்கி 2 கடைகள் கட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து புகாா் தெரிவித்தும், இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனையடுத்து ஆவேசமடைந்த கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை தங்களது வீடுகளின் மீது கருப்புக்கொடி கட்டி, நடைபெற உள்ள உள்ளாட்சி தோ்தலை புறக்கணிப்பதாகக் கூறியுள்ளனா்.

பின்னா், நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்துக்குச் சென்று, அவரது வாகனத்தை முற்றுகையிட்டு தா்னா நடத்தினா்.

வட்டாட்சியா் பூங்கொடி நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பின்னா், கிராம மக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT