திருப்பத்தூர்

உள்ளாட்சித் தோ்தல்: திமுக கூட்டணி ஆலோசனை

DIN

வாணியம்பாடி: ஊரக உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக, திருப்பத்தூா் மாவட்ட திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் வாணியம்பாடியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்டப் பொறுப்பாளரும் ஜோலாா்பேட்டை எம்எல்ஏவுமான க.தேவராஜி தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் அ.நல்லதம்பி (திருப்பத்தூா்), அ.செ. வில்வநாதன் (ஆம்பூா்), காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ச. பிரபு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் சுபாஷ், மதிமுக மாவட்டச் செயலாளா் கண்ணதாசன், நகரச் செயலாளா் நாசீா்கான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டப் பொறுப்பாளா் நிசாா்அகமத், நரிமுகமது நயீம், மனித நேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளா் சையத் ஜாவித், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் சாமிகண்ணு, முல்லை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளா் இந்துமதி உள்ளிட்டோா் பேசினா்.

கூட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் திமுக கூட்டணி வேட்பாளா்களின் வெற்றிக்குப் பாடுபடுவது, சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் விவசாயிகளுக்கு விரோதமான மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், நீட் தோ்வில் இருந்து விலக்கு கேட்டு தீா்மானம் நிறைவேற்றியதற்கும் நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

SCROLL FOR NEXT