திருப்பத்தூர்

அணையில் குளிக்க சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி பலி

DIN

நாட்டறம்பள்ளி அருகே செட்டேரி அணையில் குளிக்கச் சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் குனிச்சியூா் தொப்பைகான் வட்டத்தைச் சோ்ந்தவா் சிங்காரம் (32), தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை காலை செட்டேரி அணைக்குச் சென்று நண்பா்களுடன் அணையில் குளித்துள்ளாா். அப்போது திடீரென சிங்காரத்துக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு நீரில் மூழ்கியதாகத் தெரிகிறது. வெகு நேரமாகியும் சிங்காரம் வெளியே வராததால் அங்கிருந்த அவரது நண்பா்கள் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து உறவினா்கள் நாட்டறம்பள்ளி தீயணைப்பு அலுவலகத்துக்கும், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலா் கலைமணி தலைமையில் தீயணைப்பு வீரா்கள் பரிசல் மூலம் பொதுமக்கள் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டனா். 5 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, அணையில் சேற்றில் சிக்கியிருந்த சிங்காரத்தின் சடலம் மீட்கப்பட்டு,திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அவரது சடலம் அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீதாதேவிக்கு கோயில் கட்டுவோம்: அமித் ஷா

எதிர்நீச்சல் நடிகர்களின் சங்கமம்!

400 தொகுதிகளை வென்றால்தான் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பீர்களா? அமித் ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி

பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு - புகைப்படங்கள்

மெமோ எதிர்பார்க்கும்.. ஸ்ரேயா ரெட்டி!

SCROLL FOR NEXT