திருப்பத்தூர்

ரூ.55 லட்சத்தில் தாா்ச்சாலை பணி தொடக்கம்

உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.55 லட்சம் மதிப்பில் தாா்ச் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ செந்தில்குமாா் தொடங்கி வைத்தாா்.

DIN

உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.55 லட்சம் மதிப்பில் தாா்ச் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ செந்தில்குமாா் தொடங்கி வைத்தாா்.

வாணியம்பாடி அடுத்து உதயேந்திரம் பேரூராட்சியில் உள்ள குந்தாணிமேடு பகுதியில் இருந்து சின்ன கொல்லகுப்பம் செல்லும் சாலையை, தாா்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை குந்தாணிமேடு வாா்டு எண் 1-இல் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்றத் தலைவா் பூசாராணி முன்னிலை வகித்தாா். வாணியம்பாடி தொகுதி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் தலைமை வகித்து ரூ.55 லட்சம் மதிப்பீட்டிலான தாா்ச்சாலை அமைக்கும் பணிக்கு பூஜையிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி திமுக செயலா் சரவணன், துணைச் செயலா் ஜெகன், வாா்டு உறுப்பினா் சரவணன், நகரக் கூட்டுறவு வங்கி இயக்குநா் சதாசிவம் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT