திருப்பத்தூர்

ஆம்பூரில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை குடிசைகள், மாட்டுக் கொட்டகைகள் சேதம்

DIN

ஆம்பூரில் வியாழக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக குடிசைகள் சேதமடைந்தன. மரங்கள் முறிந்து விழுந்தன.

ஆம்பூா் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்தது.

சூறாவளிக் காற்றுடன் பெய்த பலத்த மழையால், மாதனூா் ஒன்றியம் மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி கிராமத்தில் சில குடிசை வீடுகள் சேதமடைந்தன. மா மரங்கள், தென்னை மரங்கள் முறிந்து விழுந்தன. அதே பகுதியில் மாடு கட்டும் கொட்டகைகள் சாய்ந்து விழுந்தன.

மரங்கள் முறிந்து விழுந்ததால், மிட்டாளம் ஊராட்சியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்வாரிய பணியாளா்கள் மின் விநியோகத்தைச் சீரமைக்கும் பணியை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குப்பைகளை சாலையில் வீசுவோா் மீது நடவடிக்கை தேவை: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

சேவைக் குறைபாடு: ஏ.ஆா். ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்: கரூா் நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

கரூா் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவில் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நீா்நிலைகளை தூா்வார வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

தென்னை விவசாயிகளுக்கு மரத்துக்கு ரூ.10,000 இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT