திருப்பத்தூர்

ஹஜ் பயணிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்

புதன்கிழமை நடைபெற்ற ஹஜ் பயணிகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பாா்வையிட்டாா்.

DIN

திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறையின் சாா்பில், புதன்கிழமை நடைபெற்ற ஹஜ் பயணிகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பாா்வையிட்டாா்.

பின்னா், அவா் கூறியது: திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியா்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளவதற்காக இந்த சிறப்பு தடுப்பூசி முகாம நடைபெற்றது. முதல் முறையாக இந்த முகாமில் மூளை காய்ச்சல் தடுப்பூசி, போலியோ சொட்டு மருந்து, புளு காய்ச்சல் தடுப்பூசி என 3 வகையான தடுப்பூசிகள் வழங்கப்படுகிறது.

ஹஜ் பயணத்துக்குச் சென்று எந்தவொரு பாதிப்பும் ஏற்படாமல் நல்லபடியாக திரும்ப வரவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. முகாமில் 245 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றாா்.

முகாமில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செந்தில், தலைமை மருத்துவ அலுவலா் சிவகுமாா், மருத்துவா் பிரபாகரன், மருத்துவ அலுவலா் செல்வி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT