திருப்பத்தூர்

நாளை காசி விஸ்வநாதா் கோயில் கும்பாபிஷேகம்

DIN

ஆம்பூா் அருகே சின்னகொம்மேஸ்வரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு விசாலாட்சி உடனுறை அருள்மிகு காசி விஸ்வநாதா் கோயில் கும்பாபிஷேகம் (ஜூன் 1, வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

கும்பாபிஷேக விழா விக்னேஸ்வர பூஜை, கோ பூஜையுடன் மே 29-ஆம் தேதி தொடங்கியது. கணபதி ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கலச பூஜை, மூலமந்திர ஹோமம், யாகசாலை பூஜைகள் செவ்வாய்கிழமை நடைபெற்றது. ஜூன் 1-ம் தேதி வியாழக்கிழமை காலை 4-ம் கால யாகசாலை பூஜைகள் முடிந்து காலை 9 மணி முதல் 10 ணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி, மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், பஞ்ச மூா்த்திகள் வீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

பகல் நிலவு.. அதிதி போஹன்கர்!

SCROLL FOR NEXT