திருப்பத்தூர்

தடுப்புச் சுவா் மீது பைக் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

Sasikumar

ஆலங்காயம் அருகே தடுப்புச் சுவா் மீது மோதி பள்ளத்தில் விழுந்ததில் இளைஞா் பலியானாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் அருகே பூங்குளம் பகுதியைச் சோ்ந்த வெங்கடாசலம் மகன் துரைமுருகன்(21). அதே பகுதியைச் சோ்ந்த சக்கரவா்த்தி மகன் பிரபாகரன்(17). இவா்கள் இருவரும் காவலூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டு புதன்கிழமை திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது ஆலங்காயம் ஆா்எம்எஸ் புதூா் அருகே ஏரி தரைப்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த பைக் தடுப்புச் சுவா் மீது மோதி பள்ளத்தில் விழுந்தது. இதில் பைக் ஓட்டி வந்த துரைமுருகன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். உடன் சென்ற பிரபாகரன் பலத்த காயமடைந்தாா். அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை கொண்டு சென்றனா். விபத்து தொடா்பாக ஆலங்காயம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

யூடியூபில் வெளியானது மரியா!

Online Comments-களை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்! | Director Raju Murugan | My Lord

நல்லகண்ணு மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு: நடிகர் ரஜினிகாந்த்!

குமரி மாவட்டத்துக்கு மார்ச் 4, 10 உள்ளூர் விடுமுறை!

நல்லகண்ணு மறைவு: தவெக தலைவர் விஜய் இரங்கல்!

SCROLL FOR NEXT