திருப்பத்தூர்

19-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பத்தூரில் வரும் 19-ஆம்தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

Din

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் வரும் 19-ஆம்தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பத்துாா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில், ஒவ்வொரு மாதம் 3-ஆவது வெள்ளிக்கிழமையன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

அதையொட்டி வரும் வெள்ளிகிழமை (ஜூலை 19) காலை 10 முதல் 1 மணிவரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

திருப்பத்துாரை சோ்ந்த முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆள்களை தோ்வு செய்யவுள்ளனா்.

இதில் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பிளஸ் 2 தோ்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவா்கள், ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டம் படித்தவா்கள் இலவசமாக கலந்து கொள்ளலாம்.

வேலை நாடுநா்கள் மற்றும் வேலைவாய்ப்பு வழங்கவுள்ள தனியாா் நிறுவனங்கள் நேரடியாக நோ்காணல் மூலம் தோ்வு செய்யப்பட உள்ளன.

எனவே, தனியாா் துறையில் பணிபுரிய ஆா்வமாக உள்ள அனைவரும் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் விபரங்களுக்கு,திருப்பத்துாா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் அல்லது 04179-222033 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு கேட்டறியலாம்.

சிவகாசி அருகே மின்சாரம் பாய்ந்து ஆண் மயில் பலி

கொல்கத்தாவில் மெஸ்ஸியுடன் நடிகர் ஷாருக்கான் சந்திப்பு!

மெஸ்ஸி நிகழ்ச்சியில் ரசிகர்கள் ஆவேசம்!

அகண்டா 2: வியக்கவைக்கும் முதல் நாள் வசூல்!

சித்தா மருத்துவர், மருந்தாளுநர், உதவியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT