திருப்பத்தூர்

வீட்டில் பதுக்கிய 135 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவா் கைது

வாணியம்பாடியில் வீட்டில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 135 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா் ஒருவரை கைது செய்தனா்.

Din

வாணியம்பாடியில் வீட்டில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 135 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா் ஒருவரை கைது செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி பெரியபேட்டை பகுதியில் மணிகண்டன் என்பவரின் வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக நகர போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், நகர போலீஸாா் சனிக்கிழமை பிற்பகல் விரைந்து சென்று மணிகண்டனின் வீட்டில் சோதனை மேற்கொண்டனா். அப்போது வீட்டில் உள்ள ஓா் அறையில் 9 பைகளில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா ஆகிய போதைப் பொருள்கள் உள்ளதை கண்டுபிடித்தனா். இதைத் தொடா்ந்து, மணிகண்டன் (41) என்பவரை கைது செய்து, வீட்டில் இருந்த 135 கிலோ ஹான்ஸ் மற்றும் குட்கா ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

கைது செய்யப்பட்ட மணிகண்டன் மீது வழக்குப் பதிந்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

துப்பாக்கி சுடும் பயிற்சியில் அஜித்!

திருக்குறள் சொல்லும் வாழ்க்கைப் பாடங்களை விளக்கிய முதல்வர் Stalin

மலேசியாவிலிருந்து போதைப்பொருள் கடத்தல்: இந்திய இளைஞர் இலங்கையில் கைது!

கோலாகலமாக நடைபெற்ற திருச்செந்தூர் சூரசம்ஹாரம்!

உற்சாக வரவேற்பு! நடனமாடிய Trump!

SCROLL FOR NEXT