முகப்பு
திருப்பத்தூர்

பள்ளி மாணவியின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து மிரட்டல்: 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது!

வாணியம்பாடி அருகே 9 ஆம் வகுப்பு மாணவியின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து நண்பர்களுக்கு அனுப்பி, மிரட்டி வந்த 5 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

Updated On : 10 ஏப்ரல் 2025, 1:17 pm IST
கைது செய்யப்பட்டவர்கள்.
பகிர்:

வாணியம்பாடி அருகே 9 ஆம் வகுப்பு மாணவியின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து நண்பர்களுக்கு அனுப்பி மிரட்டி வந்த இரண்டு சிறுவர்கள் உள்பட 5 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி, முகநூல் வலைதளத்தில் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் கலையரசன் என்பவரை நண்பராக சேர்த்துக் கொண்டுள்ளார்.

பின்னர் மாணவியிடம், உன்னுடைய புகைப்படத்தை நிர்வாணமாக மார்ஃபிங் செய்து உனது பெற்றோருக்கு அனுப்பி வைப்பேன் என பல்வேறு வகையில் மிரட்டி வந்துள்ளார்.

Advertisement

Advertisement

ஒரு கட்டத்தில் மாணவியின் போட்டோவை மார்ஃபிங் செய்து அவரது நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை அறிந்த மாணவி அழுதுகொண்டு பெற்றோரிடம் நடந்ததைத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பெற்றோர், ஆலங்காயம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் போட்டோவை மார்ஃபிங் செயது மிரட்டி வந்த கலையரசனை கைது செய்தனர்.

மேலும் அவரது நண்பர்களான பூங்குளம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், சந்தோஷ் மற்றும் சிறுவர்கள் 2 பேர் என 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் சிறுவர்கள் 2 பேரை சென்னையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments