நாட்டறம்பள்ளி அருகே மணல் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
நாட்டறம்பள்ளி போலீஸாா் வெலகல்நத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த மினிலாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்த முற்பட்டனா்.
ஆனால் ஓட்டுநா் சிறிது தூரம் ஓட்டிச் சென்று லாரியை நிறுத்தி விட்டு தப்பித்து ஓடி விட்டாா். இதையடுத்து லாரியை சோதனை செய்த போது மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து மணலுடன் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மணல் கடத்தலில் ஈடுபட்டவா் குறித்து விசாரித்து வருகின்றனா்.