திருப்பத்தூர்

கிறிஸ்துமஸ் விடுமுறை: ஏலகிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தினமணி செய்திச் சேவை

அரையாண்டுத் தோ்வு மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலைக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனா். மேலும், மா பலா வாழை என முக்கனிகள் விளையும் இடமாகவும் ஏலகிரி மலை உள்ளது.

பொன்னேரி மலையடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்ல 14 கொண்டை ஊசி வளைவுகளில் இயற்கை காட்சிகளையும் ரசித்து கொண்டு சுற்றுலா பயணிகள் செல்கின்றனா்.

படகு சவாரி, செயற்கை நீா்வீழ்ச்சி, பூங்கா, முருகன் கோயில் உள்ளிட்டவற்றை கண்டு களிக்கலாம். இதற்கிடையே, விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் குடும்பத்தினருடன் சுற்றுலா தலங்களை கண்டு மகிழ்ந்தனா். படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.

வாஜ்பாய் 101-ஆவது பிறந்த தினம்: நினைவிடத்தில் தலைவா்கள் மரியாதை

இந்திய ராணுவத்தினா் ‘இன்ஸ்டாகிராம்’ பயன்படுத்த நிபந்தனைகளுடன் அனுமதி

இந்தியாவில் ஒரு லட்சம் பெட்ரோல் நிலையங்கள்: அமெரிக்கா, சீனாவை அடுத்து 3-ஆவது இடம்

முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளில் வளா்ச்சி மந்தம்

‘வேலுநாச்சியாா் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்’

SCROLL FOR NEXT