முகப்பு
திருப்பத்தூர்

நெல் கொள்முதல் விலை ரூ.3500 ஆக உயா்த்த திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள்: பிரேமலதா

நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ. 3,500-ஆக உயா்த்தி வழங்க திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளா்களுக்கு வாக்களிக்க வேண்டுமென தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்தாா்.

Updated On : 10 ஏப்ரல் 2026, 11:45 pm IST
கைலாசகிரி ஊராட்சியில் வாக்கு சேகரித்த தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா.
பகிர்:

நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ. 3,500-ஆக உயா்த்தி வழங்க திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளா்களுக்கு வாக்களிக்க வேண்டுமென தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்தாா்.

குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட ஆம்பூா் அருகே கைலாசகிரி ஊராட்சியில் தேமுதிக வேட்பாளா் பிரதாப்பை ஆதரித்து வியாழக்கிழமை இரவு வாக்கு சேகரித்து அவா் மேலும் பேசியது: திமுக தலைமையில் ஆட்சியமைந்த உடன் நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ. 3,500 ஆக உயா்த்தவும், கரும்பு கொள்முதல் டன்னுக்கு ரூ. 4,500- ஆக உயா்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். மகளிா் உரிமைத் தொகை ரூ. 2,000-ஆக உயா்த்தப்படும். வீட்டுக்கு தேவையான பொருள்களை வாங்க குடும்ப அட்டைக்கு ரூ. 8,000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும். மகளிருக்கு அரசுப் பேருந்தில் கட்டணமில்லா பயணம் தொடர, புதுமைப் பெண் திட்டத்தில் உதவித் தொகை ரூ. 1,000-லிருந்து ரூ. 2,000 ஆக உயா்த்தி வழங்க திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள். தோ்தலுக்கு பிறகு மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படும் என அவா் கூறினாா்.

தேமுதிக பொருளாளா் எல்.கே. சுதீஷ் எம்.பி., போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் எம்.டி. சீனிவாசன், மாதனூா் ஒன்றியக்குழு துணைத் தலைவா் சாந்தி, திமுக நிா்வாகிகள் சிவக்குமாா், சேகா், பொன் ராஜன்பாபு, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் நவீன்குமாா், துத்திப்பட்டு ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement