சமுதாய நல்லிணக்க சமபந்தி விருந்தில் பங்கேற்ற திமுக நிா்வாகிகள், பொதுமக்கள். 
திருப்பத்தூர்

ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் சமுதாய நல்லிணக்க சமபந்தி விருந்து

திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் மதனாஞ்சேரி பகுதியில் உள்ள தளபதி அறிவாலயம் வளாகத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 15-ஆம் ஆண்டாக சமுதாய நல்லிணக்க சமபந்தி விருந்து வியாழக்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி, ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட திமுக நிா்வாகிகள், உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் சுமாா் 15,000 பேருக்கு ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் வி.எஸ்.ஞானவேலன் சாா்பில் விருந்து, பொதுமக்களுக்கு நல உதவிகள், தினசரி காலண்டா் வழங்கினாா்.

விழாவில், நையாண்டி, கரகாட்டம், ஓயிலாட்டம், இசைக் கச்சேரி, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திருப்பத்தூா் மாவட்டத்தை சோ்ந்த திமுக மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூா் நிா்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் பலா் கலந்து கொண்டனா்.

மெரீனா கடற்கரையில் கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்க உத்தரவு

உலோகத் துறை பங்குகளால் உயா்வு கண்ட பங்குச்சந்தை

பஜாஜ் வாகன விற்பனை 14% உயா்வு

ஓய்வு பெறுகிறாா் உஸ்மான் கவாஜா: இனவெறிக்கு ஆளானதாக ஆதங்கம்

அமீரா, திலோத்தமாவுக்கு தங்கம்

SCROLL FOR NEXT