முகப்பு
திருவள்ளூர்

பசுந்தீவனம் சாகுபடிக்கு மானியம்: ஆட்சியர்

திருவள்ளூர் மாவட்டத்தில் வறட்சி நிவாரணத் திட்டத்தின் கீழ், பசுந்தீவனம் சாகுபடி செய்ய அரசு மானியம் வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தெரி

Updated On : 13 மே 2013, 12:32 am IST
பகிர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் வறட்சி நிவாரணத் திட்டத்தின் கீழ், பசுந்தீவனம் சாகுபடி செய்ய அரசு மானியம் வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் விலையில்லா கால்நடைகள் வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் மாநிலத் தீவன விரைவு அபிவிருத்தித் திட்டத்தின்கீழ், தீவனப்புல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டுகளை போலவே, இந்த ஆண்டிலும் பசுந்தீவனம் சாகுபடிக்கு அரசு மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்த மானியத்தை பெற விரும்பும் விவசாயிகள், தங்களின் அருகே உள்ள கால்நடை நிலையங்களை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.