திருவள்ளூர்

50 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை

DIN

திருத்தணியில் 50 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையை எம்.பி. கோ.அரி சனிக்கிழமை வழங்கினார்.
திருத்தணி புறவழிச்சாலையில் உள்ள ரேஷன் கடையில் புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கும் நிகழச்சியை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:
போலி குடும்ப அட்டைகளை நீக்கி முறைகேடுகளைத் தடுக்கவும், அத்தியாவசியப் பொருள்கள் கொள்முதலில் தமிழக அரசுக்கு ஏற்படும் செலவினங்களை குறைக்கவும் மின்னணு குடும்ப அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனைப் பெற குடும்ப அட்டைதாரர்கள் ஆதார், செல்லிடப்பேசி விவரங்களை நியாவிலைக் கடைகளில் தெரிவித்தால், சம்பந்தப்பட்டவர்களின் செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் வரும்.
அதனை காண்பித்து, புதிய மின்னணு குடும்ப அட்டையை பயனாளிகள் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
இந்நிகழ்ச்சியில், திருத்தணி கூட்டுறவு சங்கத் தலைவர் ஜெயசேகர்பாபு, முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் இ.என்.கண்டிகை ரவி, முன்னாள் நகர்மன்றத் தலைவர் டி. சௌந்தர்ராஜன் உள்பட பலர் கலந்து
கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

SCROLL FOR NEXT