திருவள்ளூர்

தீவிரமடையும் மருத்துவர்கள் போராட்டம்: தொடர் விடுப்பில் செல்ல முடிவு

DIN

அரசு மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பில் வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இட ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனைக் கண்டித்து மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கோரிக்கையை நிறைவேற்றும் வரை தொடர் விடுப்பில் செல்ல மருத்துவர்கள் முடிவு செய்துள்ளதால் நோயாளிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அரசு மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பில் வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இட ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இதனால் அரசு மருத்துவர்கள் உடல் உறுப்புகளில் சிறப்பு சிகிச்சைகள் குறித்து மேற்படிப்பு படிக்க முடியாத நிலை ஏற்படும். இந்த உத்தரவால் பல அரசு மருத்துவர்கள் அரசு பணியை விட்டுச் செல்லும் அபாயமும் உள்ளது.
இந்த உத்தரவை ரத்து செய்து பழைய நிலையே தொடர வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த வியாழக்கிழமை முதல் வெளிநோயாளிகள் பிரிவு அரசு மருத்துவர்கள் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், காய்ச்சல், அஜீரண கோளாறு, கை, கால் வலி, சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்காக அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சிகிச்சை பெறமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
இந்நிலையில் அரசு மருத்துவர்கள் போராட்டம் குறித்து தமிழக அரசு கவனம் செலுத்தாமல் உள்ளதால், போராட்டம் தீவிரமடையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும், தற்போது மருத்துவமனைக்கு வந்து, வெளிநோயாளிகள் பிரிவில் மட்டும் பணி புரியாமல், அந்த நேரத்தில் பணிபுறக்கணிப்பு செய்து மற்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், வரும் திங்கள்கிழமை முதல் அனைத்து மருத்துவர்களும் காலவரையற்ற விடுமுறை எடுத்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதனால் அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகள் பிரிவை இழுத்து மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT