முகப்பு
திருவள்ளூர்

மீன் வளர்ப்புத் தொழிலுக்கு 50 சதவீத மானியம்

திருவள்ளூர் மாவட்டத்தில், பண்ணைக்குட்டைகள் அமைத்து மீன் வளர்ப்புத் தொழில் செய்ய 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார். 

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

திருவள்ளூர் மாவட்டத்தில், பண்ணைக்குட்டைகள் அமைத்து மீன் வளர்ப்புத் தொழில் செய்ய 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : அரசு மீன்வளத்துறை மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வேளாண் விவசாயிகள் பல்நோக்கு பண்ணைக் குட்டைகள் அமைத்து மீன்வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 
இத்திட்டம் மூலம் பண்ணைக்குட்டைகள் அமைக்க 50 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் வரும் ஜனவரி-10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதில், தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். 
மேலும் இதுகுறித்த விவரங்களுக்கு, மீன்துறை உதவி இயக்குநர், எண். 11, திருவொற்றியூர் சாலை, பொன்னேரி, திருவள்ளூர் மாவட்டம்-601204 என்ற முகவரியிலும், 044-2797 2457 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →