திருவள்ளூர்

உலக தண்ணீர் தினம்: கிராம மக்களுக்கு விழிப்புணர்வு

DIN

உலக தண்ணீர் தினத்தையொட்டி, தனியார் தொண்டு நிறுவனம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் ஆகியவை இணைந்து கிராம மக்களுக்கு தண்ணீர் சிக்கனம் மற்றும் பாதுகாப்பான தண்ணீர் குறித்த விழிப்புணர்வு முகாமை புதன்கிழமை நடத்தின.
திருவள்ளூரை அடுத்த மேல்நல்லாத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற முகாமுக்கு, சேவ் பொதுநல அறக்கட்டளை நிறுவனர் பிரதாப் தலைமை வகித்தார்.
இதில், முன்னாள் ஊராட்சித் தலைவர் வைலட் சுந்தரம், இளநிலை குடிநீர் பகுப்பாளர் கோலப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் (நிர்வாகம்) லியாகத் அலி பேசுகையில், இருக்கும் தண்ணீரை நாம் சிக்கனமாக செலவழித்து மிச்சப்படுத்தினாலே உரிய பலன் கிடைக்கும்.
அரசு விதிப்படி, ஒரு நபருக்கு ஒரு நாளைய தண்ணீர் செலவு, குடிக்க, முகம், கை, கால் கழுவ, குளிக்க உள்ளிட்ட அனைத்துக்கும் 40 லிட்டர் போதுமானது எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் நாம் சராசரியாக 80 முதல் 100 லிட்டர் தண்ணீர் வரை செலவு செய்கிறோம் என்றார்.
நிகழ்ச்சியில், தொண்டு நிறுவன உறுப்பினர்கள் மூர்த்தி, கார்த்திகேயன், பூங்கொடி, பாக்கியராஜ், லோகேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கும்மிடிப்பூண்டியில்...
உலக தண்ணீர் தினம் குறித்து கும்மிடிப்பூண்டி பேரூராட்சியின் சார்பில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி செயல் அலுவலர் ரவி தலைமை வகித்தார். இதில் பேரூராட்சி ஊழியர்கள், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பங்கேற்று கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து ரெட்டம்பேடு சாலை வழியாக பஜார் வீதிகளில் பேரணியாகச் சென்றனர். பேரணியின்போது, மாணவ, மாணவிகள் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர். பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கி தண்ணீர் சிக்கனத்தை எடுத்துரைத்தனர்.
மேலும், தண்ணீர் சிக்கனம் குறித்து வீதி வீதியாக விழிப்புணர்வுப் பிரசாரம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT