திருவள்ளூர்

வேலைவாய்ப்பு முகாம்: 566 பேருக்கு பணி ஆணை வழங்கல்

DIN

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி அரசினர் கலைக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 566 பேருக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வழங்கினார்.
தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் புதுவாழ்வு திட்டம் ஆகியன இணைந்து இந்த முகாமை நடத்தின.
இதில், எம்.பி. கோ.அரி, எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் ஆகியோர் கலந்துகொண்டு வேலை வாய்ப்பு முகாமினை பார்வையிட்டனர்.
இதில், ஆட்சியர் எ.சுந்தரவல்லி பேசியதாவது:
இம்முகாமில் 29 தனியார் நிறுவனங்களில் உள்ள 2,615 காலிப் பணியிடங்களுக்கு நேர்காணல் நடைபெற்றது. வேலைவாய்ப்பற்றோர் இதுபோன்ற முகாம்களில் பங்கேற்று பயன்பெற வேண்டும் என்றார்.
காலை 10.30 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெற்ற வேலைவாயப்பு முகாமில் 752 ஆண்களும், 316 பெண்களும் என 1,068 பங்கேற்றனர்.
இவர்களில் 446 ஆண்களும், 120 பெண்களும் என 566 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் பா.கிருஷ்ணம்மாள், காஞ்சிபுரம் - திருவள்ளூர் ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் வேலஞ்சேரி த.சந்திரன், திருத்தணி கோட்டாட்சியர் விமல்ராஜ், முன்னாள் நகர்மன்றத் தலைவர் டி.சௌந்தர்ராஜன், மாவட்ட கவுன்சிலர் டி.டி.சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

கோடைகாலத்தில் மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் அவசியம் -மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

சா்வதேச ஸ்கேட்டிங் போட்டி: தங்கப் பதக்கங்களை வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

SCROLL FOR NEXT