முகப்பு
திருவள்ளூர்

மர்மக் காய்ச்சல்: இளைஞர் சாவு

அம்பத்தூர் அருகே மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்தார். அம்பத்தூர் - கருக்கு இந்திரா நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் (29). இவர் கடந்த ஒருவாரமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்தார். 

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

அம்பத்தூர் அருகே மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்தார். அம்பத்தூர் - கருக்கு இந்திரா நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் (29). இவர் கடந்த ஒருவாரமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்தார். 
இதையடுத்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது விஷக்காய்ச்சல் என்று கூறப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தவர் வியாழக்கிழமை காலை உயிரிழந்தார். 
இதைத்தொடர்ந்து, இந்தப் பகுதி முழுவதும் சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலத்தின் சார்பில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

முழு கட்டுரையைப் படிக்க →