கும்மிடிப்பூண்டி சிப்காட் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு சங்கத் தலைவர் கோ.மா. கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் ஜெ. ராஜ ரத்தினம் முன்னிலை வகித்தார். பொருளாளர் கே. ராஜகோபாலன் வரவேற்றார்.
இதில் 2016-17-ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து, 2017-18 ஆம் ஆண்டிற்கான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் தலைவராக கோ.மா. கிருஷ்ணமூர்த்தி, செயலாளராக ஜெ. ராஜரத்தினம் பொருளாளராக கே. ராஜகோபாலன் ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும், துணைத் தலைவராக எஸ். ராமன், இணைச் செயலாளர்களாக கே. திருமலைதாசன், கே. குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தொடர்ந்து, செயற்குழு உறுப்பினர்களாக சஞ்சீவ் ஜெயின், பி. ரவிக்குமார் அஜய் துல்சியான், வி. சிவா, ஜெ.ஜெ. ஆனந்த் எட்வர்டு, ஏ. ரவி, டி. சுதாகர், எம். சுரேஷ்பாபு, எம். யுவராஜ், பி.ஆர். மாதவன், வி. தேவி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் நிறைவாக அலுவலகப் பொறுப்பாளர் தி.க. பிரேம்குமார் நன்றி கூறினார்.