திருவள்ளூர்

இன்று முதல் 13 -ஆம் தேதி வரை  இளைஞர் தொழில் நெறி விழிப்புணர்வு வாரம்

திருவள்ளூர் மாவட்ட இளைஞர்கள் பயன்பெறும் நோக்கத்தில் திங்கள்கிழமை (ஜூலை 9) முதல் 13-ஆம் தேதி வரை தொழில் நெறி விழிப்புணர்வு வாரம்

DIN

திருவள்ளூர் மாவட்ட இளைஞர்கள் பயன்பெறும் நோக்கத்தில் திங்கள்கிழமை (ஜூலை 9) முதல் 13-ஆம் தேதி வரை தொழில் நெறி விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப் படுவதாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 
இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  தற்போதைய நிலையில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அனைத்தும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள இளைஞர்களுக்கு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து வாரந்தோறும் தொழில்நெறி விழிப்புணர்வு வாரமாக கடைப்பிடிக்கவும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் தொழில் விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் திங்கள்கிழமை (ஜூலை 9) முதல் 13 -ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. 
இதையொட்டி,  திங்கள்கிழமை (ஜூலை 9)  தொழில்நெறி விழிப்புணர்வு குறித்த துண்டுப் பிரசுரங்களை இளைஞர்களுக்கு விநியோகம் செய்யும் வகையில் பேரணி நடைபெறும். இதையடுத்து, ஜூலை 10-ஆம் தேதி, மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் மற்றும் முன்னுரிமையுள்ளோருக்கான வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வுப் பிரசாரம் நடைபெறும்.  இதைத்தொடர்ந்து, அவர்களுக்கு தொழில் பிரிவுகளில் பயிற்சி அளிக்க ஏற்பாடு, அரசுப் பணியிடங்களில் இட ஒதுக்கீடு மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து விளக்கம் அளிக்கப்படும்.  
 தொடர்ந்து,  ஜூலை 11 -ஆம் தேதி, மகளிர் பள்ளி மற்றும் மகளிர் கல்லூரிகளில் திறன் பயிற்சி, தொழில்நெறி வழிகாட்டுதல் கல்வி உதவித்தொகை, சுயதொழில் போன்றவை குறித்த விளக்கம் அளிக்கப்படும். 
ஜூலை 12-ஆம் தேதி, பள்ளி மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல், திறன் பயிற்சி குறித்த போட்டிகள் நடைபெறும். ஜூலை 13-ஆம் தேதி, தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு தொழில் முனைவோர், சிறந்த தொழிலதிபர்கள், அரசில் பணிபுரிவோர், பெரிய நிறுவன அலுவலர்கள் போன்றோர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. 
அதனால், இந்நிகழ்ச்சிகளில் இளைஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

"சென்னை வந்த உடன் முடிகொட்டுகிறதா?" காரணம் இதுதான்! | Special Interview with Dr. Karthik Raja

ஒரு பார்வை போதும்... கஜோல்!

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

SCROLL FOR NEXT