முகப்பு
திருவள்ளூர்

புழல் மத்திய சிறையில் பிளஸ் 2 தேர்வு:  68 சிறைவாசிகள் பங்கேற்பு

புழல் மத்திய சிறையில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் 68 சிறைவாசிகள் கலந்துகொண்டு தேர்வு எழுதினர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

புழல் மத்திய சிறையில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் 68 சிறைவாசிகள் கலந்துகொண்டு தேர்வு எழுதினர்.
புழல் சிறை வளாகத்தில் சிறைவாசிகள் பயன்பெறும் நோக்கில் ஆண்டு தோறும் பிளஸ் 2 பொதுத் தேர்வு மையம் செயல்படுகிறது. இதன்படி, 2017-18 ஆம் கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வுகள் வியாழக்கிழமை (மார்ச் 1) காலை தொடங்கின. இதில் தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை எழுத 103 சிறைவாசிகள் பதிவு செய்து இருந்தனர். இந்நிலையில் 30 பேர் விடுதலையானதால் மீதம் 73 பேரில் 68 பேர் தமிழ்முதல் தாள் தேர்வை எழுதியுள்ளனர். 
இதில்,  புழல் மத்திய சிறைத்துறைத் துணைத் தலைவர் (பொறுப்பு) ஆ.முருகேசன் கலந்துகொண்டு சிறைவாசிகளுக்கு வினாத்தாள்களை வழங்கி தேர்வைத் தொடங்கி வைத்தார். சிறைக்கண்காணிப்பாளர் பி.சூசைமாணிக்கம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →