திருவள்ளூர்

மரக்கன்றுகள் நடும் திட்டம்

DIN

திருவள்ளூர் அருகே திறந்தவெளியில் மலம் கழித்த பகுதியை பூங்காவாக மாற்றும் வகையில், மரக்கன்றுகள் நடும் திட்டத்தை ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் சர்வதேச கழிப்பறை தினத்தையொட்டி தூய்மை பாரத இயக்கத் திட்டம் மூலம், கிராமங்களில் திறந்தவெளியில் மலம் கழித்தலை முற்றிலும் தவிர்த்து, தனிநபர் கழிப்பறைகளைப் பயன்படுத்த வலியுறுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 
அந்த வகையில் திருவள்ளூர் அருகே  புதுச்சத்திரம் ஊராட்சியைச் சேர்ந்த ஜமீன் கொரட்டூர் கிராமத்தில் திறந்தவெளியில் மலம் கழிக்க பயன்படுத்தப்பட்ட பகுதிகளை பூங்காவாக மாற்றும் வகையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டார். 
அதைத் தொடர்ந்து, அங்கிருந்த பொதுமக்களிடையே அவர் பேசியது: கிராமங்களில் திறந்த வெளியில் மலம் கழிப்பதால்  ஏற்படும் தொற்று நோய் பாதிப்பைத் தடுக்கவே வீடுகள் தோறும் தனிநபர் கழிப்பறை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
இத்திட்டம் மூலம் அமைக்கப்பட்ட கழிப்பறைகளை குடும்பத்தினர் அனைவரும் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். அதோடு, கிராம மக்களின் நலம் கருதி, இதுவரையில் மலம் கழிக்கப் பயன்படுத்தப்பட்ட இடங்களில், சுற்றுச்சூழலை பசுமையாக்கும் வகையில் மரக்கன்றுகளை நடவேண்டும். இந்த மரக்கன்றுகளை பொதுமக்களாகிய நீங்கள்தான் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். 
அதைத் தொடர்ந்து, ஆட்சியர் முன்னிலையில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் தனிநபர் கழிப்பறையை தொடர்ந்து பயன்படுத்துவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ச.சா.குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தூர் தொகுதியில் 1.9 லட்சம் வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் நோட்டா!

வடகிழக்கு மாநிலங்களில் நிலவரம் என்ன?

திமுகவுக்கு 38... விருதுநகரில் இழுபறி; தருமபுரியில் பாமக முன்னிலை!

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழகத்தில் முதன்முதலாக 10% வாக்கு பெற்ற பாஜக

ஜார்க்கண்ட்: முன்னிலையில் அன்னபூர்ணா தேவி!

SCROLL FOR NEXT