திருவள்ளூர்

சபரிமலை பாதுகாப்பு: இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

DIN

அனைத்து வயது பெண்களையும் சபரிமலைக்கு அனுமதிக்கும் நீதிமன்ற தீர்ப்பைக் கண்டித்து பாஜகவினர் மற்றும் சபரிமலை பாதுகாப்பு இயக்கத்தினர் திருவள்ளூரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
சபரிமலையின் புனிதத்தைக் கெடுக்க நினைக்கும் கேரள அரசை கண்டித்தும், ஐயப்ப பக்தர்கள் தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் தடுக்க வலியுறுத்தி, திருவள்ளூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜகவின் மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார். சபரிமலை பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்ட நிர்வாகி தினேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
இதில் பாஜகவின் மாநில துணைத்தலைவர் பி.டி.அரசகுமார் கலந்து கொண்டு பேசுகையில், அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டித்து, ஐயப்ப பக்தர்கள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் பல இந்து அமைப்புகளுடன் பாஜகவும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். 
இந்த ஆர்ப்பாட்டம் மூலம் சபரிமலையில் புனிதம் காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
இந்த ஆர்ப்பாட்டத்தில், சபரிமலை பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், பாஜகவைச் சேர்ந்த பொதுச்செயலாளர் ராஜ்குமார், மாவட்டச் செயலாளர் பாலாஜி, இளைஞரணி மாவட்டத் தலைவர் ஆர்யா சீனிவாசன் உள்ளிட்ட ஐயப்ப பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT