திருவள்ளூர்

சாலையில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் விபத்து

DIN

கும்மிடிப்பூண்டி அருகே, நெடுஞ்சாலை ஓரம் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் அப்பகுதியில் நாய்களும், பன்றிகளும் எப்போதும் சுற்றித் திரிவதால் சாலை விபத்துகள் ஏற்படுவதாக இரு சக்கர வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர். 
கும்மிடிப்பூண்டியை அடுத்த மாதர்பாக்கம்-சத்தியவேடு நெடுஞ்சாலை வழியாக சிறுவாடா, கண்ணன்கோட்டை, பூவலம்பேடு, தேர்வாய், அமரம்பேடு, கொள்ளானூர் மற்றும் ஆந்திரப் பகுதியான சத்தியவேடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர்.
மேலும், பல்வேறு பகுதிகளில் இருந்து மாதர்பாக்கம் வழியாக தேர்வாய் சிப்காட் தொழிற்பேட்டைக்கு வேலைக்குச் செல்வோர் இவ்வழியாகச் செல்கின்றனர். இந்நிலையில், நேமள்ளூர் மற்றும்  மாதர்பாக்கம் பகுதிகளில் நடத்தப்படும் கறிக்கடைகளின் இறைச்சிக் கழிவுகள் நெடுஞ்சாலை ஓரமாக கொட்டப்படுகிறது.
இதனால் பன்றிகள், நாய்கள் ஆகியவை அந்த இடத்தில் மேய்வதும், அவை ஒன்றோடொன்று சண்டையிட்டு சாலையின் குறுக்கே ஓடுவதுமாக உள்ளன. அவ்வாறு, இறைச்சியை கவ்விக் கொண்டு ஓடும் நாய்களால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளை சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
எனவே, மாதர்பாக்கம்-நேமள்ளூர் பகுதியில் நெடுஞ்சாலையில் இறைச்சிக் கழிவுகளைக் கொட்டுவதால் ஏற்படும் விபத்துகளையும் சுகாதார சீர்கேட்டையும் தடுக்கும் வகையில் சுகாதாரத் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

SCROLL FOR NEXT