திருவள்ளூர்

பெண் உதவி ஆய்வாளரை மிரட்டியதாக 4 பேர் மீது வழக்கு

DIN


திருவள்ளூர் பகுதி கடைகளில்  லாட்டரி சீட்டு வைத்திருந்தது குறித்து விசாரித்த, பெண் உதவி ஆய்வாளரை மிரட்டியதாக 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  
திருவள்ளூர் பகுதிகளில், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக எஸ்.பி. இரா.பொன்னிக்கு  தகவல் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நகர காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராக்கிகுமாரி தலைமையில் போலீஸார் புதன்கிழமை ரோந்து சென்றனர்.  ஜே.என்.சாலை, தேன்கனிக்கோட்டை தெரு, முகமது அலி 2-ஆவது தெரு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்ட  போது, அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரியவந்தது. உடனே நடவடிக்கை எடுக்க முயற்சிக்கும் போது  பெண் உதவி ஆய்வாளரை மிரட்டியுள்ளனர். இதுகுறித்து  ராக்கிகுமாரி, திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ராகவன் (71), குமார் (51), சரவணன் (42) மற்றும் அகமது பாஷா (50) ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் 15 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்: முதல்வா் சித்தராமையா

திருச்சியில் 124 சுற்று வாக்கு எண்ணும் பணிக்கு 1,627 போ்!

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிா்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளரிடம் வழிப்பறி

‘வாசிக்கும் பழக்கம் வாழ்வையே மாற்றும்’

SCROLL FOR NEXT