திருவள்ளூர்

முதியோருக்கு நல உதவிகள்

DIN


கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் அன்னை அறக்கட்டளை சார்பில் முதியோருக்கு நல உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
தனிமையில் வாழும் முதியோருக்கு மாதந்தோறும் 5 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை, சோப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை வழங்கும் நிகழ்வு பொங்கல் விழாவையொட்டி தொடங்கப்பட்டது. நிகழ்வுக்கு அன்னை அறக்கட்டளை நிறுவனர் எஸ்.மேரிசந்தோஷ் தலைமை வகித்தார். மு.க.சேகர் முன்னிலை வகித்தார். சமூக சேவகர் ஆரோக்கிய மேரி வரவேற்றார். வர்ஷா சிறப்புரை ஆற்றினார். நிகழ்வில் முதியோர் 50 பேருக்கு போர்வைகள் வழங்கப்பட்டன.
இதில், தமிழக அரசுப் பணியாளர்கள் ஐக்கிய சங்க மாநிலத் தலைவர் பொன்னி வளவன், மாநில பொதுச் செயலர் முத்துக்குமார், மாநிலச் செயலர் கமலக்கண்ணன், வழக்குரைஞர் எலிஸ்பானு, கணக்காளர் பர்வதவர்த்தினி, சுப்பிரமணி ஆகியோர் கலந்துகொண்டனர். ஜெஸி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

SCROLL FOR NEXT