திருவள்ளூர்

மாணவர்களுக்கு போதைப் பொருள் விழிப்புணர்வுக்கு உத்தரவு

DIN


உலக போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, கும்மிடிப்பூண்டி சரக காவல் துறை சார்பில் அனைத்துப் பள்ளிகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கல்பனா தத் என அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
ஆண்டுதோறும் ஜூன் 26-ஆம் தேதி உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம் மற்றும் சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு தினம் ஆகியவை கடைப்பிடிக்கப்படுகின்றன. இதையொட்டி, போதைப் பொருள் பயன்படுத்தல், போதைப் பொருள் கடத்தல் பற்றிய விழிப்புணர்வை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.
மேலும் பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் பிரசாரம், பேரணி, விழிப்புணர்வு நாடகம் உள்ளிட்டவற்றை நடத்த காவல் துறையினருக்கு டிஎஸ்பி கல்பனா தத் உத்தரவிட்டுள்ளார். 
இதன் மூலம் கும்மிடிப்பூண்டியில் பொது அமைதி காக்கப்படுவதுடன், சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கோட்’ இரண்டாவது பாடல் அப்டேட்!

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

வில்வித்தை: இந்தியாவின் ஜோதி சுரேகா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு!

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனை!

SCROLL FOR NEXT