திருவள்ளூர்

மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

DIN

திருத்தணியை அடுத்த பாப்பிரெட்டிப்பட்டி மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தீ மிதித் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 பாப்பிரெட்டிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் 33-ஆம் ஆண்டு தீ மிதித் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
 அதைத் தொடர்ந்து நாள்தோறும் காலை 9 மணி அளவில் கரக ஊர்வலம், தீபாராதனை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று வந்தது.
 இந்நிலையில், கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. காலை 11 அளவில் கோயில் அருகில் பெண் பக்தர்கள் கோலம் போட்டு, கூழ் வார்த்து, பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். காப்புக் கட்டி விரதமிருந்து வந்த பக்தர்கள், இரவு 7 மணியளவில் தீ மிதித்து அம்மனை வழிபட்டனர்.
 இரவு 8 மணிக்கு வாணவேடிக்கையும் 8.30 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும் சிறப்பாக நடைபெற்றன. 10 மணி அளவில் பக்தி நாடகம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT