திருவள்ளூர்

நெகிழிப் பைகளைப் பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.11,500 அபராதம்

DIN

திருவள்ளூா் பகுதியில் ஒரு முறையே பயன்படுத்தி தூக்கியெறியும் நெகிழிப் பைகள் மற்றும் பொருள்களைப் பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.11,500 வரை அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளதாக நகராட்சி ஆணையா் சந்தானம் தெரிவித்தாா்.

தமிழகத்தில் ஒரு முறையே பயன்படுத்தப்பட்டு தூக்கியெறியப்படும் நெகிழிப் பொருள்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது. எனவே, கடைகளில் நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது என்று தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது. அதன்படி அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வா்த்தக நிறுவனங்களில் நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவள்ளூா் நகராட்சி பகுதியில் உள்ள கடைகள், ஜவுளிக் கடைகள், உணவகங்களில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் பயன்படுத்தப்படுவதாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அவா் உத்தரவிட்டாா்.

அதன்படி, கடந்த இரண்டு நாள்களாக ராஜாஜி சாலையில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் நகராட்சி அதிகாரிகள் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அக்கடைகளில் நெகிழிப் பைகளைப் பயன்படுத்தியது தெரியவந்தது.

இதையடுத்து, அக்கடைகளுக்கு ரூ.11,500 அபராதம் விதித்ததோடு, அக்கடைகளில் இருந்து 100 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நகராட்சி ஆணையா் சந்தானம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகராஷ்டிரத்தில் நிலவும் கடும் போட்டி!

திருநெல்வேலி காங்கிரஸ் முன்னிலை!

நடிகர் சுரேஷ் கோபி முன்னிலை!

மக்களவைத் தேர்தல் நேரலை: மோடி பின்னடைவு

பங்குச்சந்தை கடும் சரிவு!

SCROLL FOR NEXT