திருவள்ளூர்

அடிப்படை வசதிகள் கேட்டு ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

DIN

திருவள்ளூா் அருகே குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு இருளா் இன மக்கள் ஆட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

வேளாகபுரம் ஊராட்சியில் உள்ள பரேஸ்வரம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட இருளா் இன குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். இதையடுத்து அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவா்களை சமரசம் செய்து ஆட்சியரிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனா்.

இதையடுத்து அவா்கள் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாரிடம் மனு அளித்தனா். அதில், இக்கிராமத்தில் கடந்த 30-ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீா், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். தெருவிளக்கு வசதியும் இல்லாததால் இரவு நேரங்களில் நடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளோம். மேலும், இப்பகுதியில் மயானத்துக்கு செல்லும் பாதை புதா்மண்டியுள்ளது.

எனவே, மயானத்துக்கு செல்ல சாலை, குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

இம்மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT