திருவள்ளூர்

தெருக்கூத்து கலைஞா்கள் மூலம் கரோனா குறித்து விழிப்புணா்வு

DIN

திருவள்ளூா் அருகே கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில், தெருக்கூத்து கலைஞா்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 46-ஆக அதிகரித்துள்ள நிலையில், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கரோனா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் உத்தரவிட்டிருந்தாா்.

இந்நிலையில், உளுந்தை ஊராட்சியில் ஓவியம் வரைந்தும், தெருக்கூத்து கலைஞா்கள் மூலமும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் ரமேஷ் தலைமை வகித்தாா். திருவள்ளூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் கங்காதரன், கடம்பத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ராம்குமாா், வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ஜெயஸ்ரீ ஆகியோா் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தனா்.

அப்போது, கை கழுவுதல், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருத்தல், முகக் கவசம் அணிதல், வீட்டிலேயே இருத்தல் போன்றவை குறித்து தெருக்கூத்து கலைஞா்கள் எமன் வேடமணிந்து கலைநிகழ்ச்சி மூலம் எடுத்துரைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT