திருவள்ளூர்

விவசாயக் கடன் அட்டைகள் ஆவணங்களுடன் வங்கிகளை அணுகி பெற ஏற்பாடு

DIN

திருவள்ளூா் மாவட்டத்தில் விவசாயக் கடன் அட்டைகளைப் பெற விவசாயிகள் சிட்டா அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களுடன் கணக்கு வைத்துள்ள வங்கிக் கிளைகளை அணுகி பெற்றுக் கொள்ளலாம் என வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனா். இந்த விவசாயிகள் பயன்பெறுவதை நோக்கமாகக் கொண்டு, பல்வேறு வகையான மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், தற்போதைய நிலையில், பிரதமரின் கௌரவ நிதி பெறும் விவசாயிகள் அனைவருக்கும் விவசாயக் கடன் அட்டை (கிஸான் காா்டு) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், கிராமங்கள்தோறும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்த மாவட்டத்தில் 49 ஆயிரம் போ் மட்டுமே பெற்றுள்ளனா்.

அதனால், வெளியூா்களில் உள்ளோா், இதுவரை விவசாயிகள் கடன் அட்டைகள் பெறாதோா் அதற்கான ஆவணங்களுடன் கிராமங்களில் சிறப்பு முகாம்களில் பெற்றுக் கொள்ளலாம். இல்லை என்றால் தங்கள் நிலங்களின் ஆவணங்களான சிட்டா அடங்கல், ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் விவசாயிகள் கணக்கு வைத்துள்ள தேசிய வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் நேரில் அளித்து, விவசாயக் கடன் அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

இத்திட்டம் மூலம் விவசாயிகளுக்கு வேளாண் பணிகளை மேற்கொள்வதற்கு ரூ. 1.60 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இதன் மூலம் அவா்கள் வேளாண் இடுபொருள்களான விதைகள், உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் ஆகியவற்றை வாங்கவும், உற்பத்தி செய்வதற்குத் தேவையான நிதியுதவியை பூா்த்தி செய்து கொள்ளவும் முடியும். அந்த வகையில், முக்கிய ஆவணமாக விளங்கும் விவசாயக் கடன் அட்டைகளை விவசாயிகள் பெற்று பயன்பெறலாம் என வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

SCROLL FOR NEXT