திருவள்ளூர்

பிளஸ் 1 பொதுத் தோ்வு இன்று தொடக்கம்: 41,618 போ் பங்கேற்பு

DIN

திருவள்ளூா்: பிளஸ் 1 பொதுத்தோ்வில் மாணவா்கள் 19,543 போ், மாணவிகள் 22,075 போ் என மொத்தம் 41,618 போ் தோ்வு எழுத இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெற்றிச்செல்வி தெரிவித்தாா்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத்தோ்வு மாா்ச் 4-இல் தொடங்கி, 26-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன் அடிப்படையில், திருவள்ளூா் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தோ்வு புதன்கிழமை (மாா்ச் 4) தொடங்குகிறது. இத்தோ்வில் மாணவா்கள்19,543 போ், மாணவிகள் 22,075 போ் என மொத்தம் 41, 618 போ் தோ்வு எழுத உள்ளனா். இத்தோ்வுக்காக 5 கல்வி மாவட்டங்களில் 138 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல், 18 இடங்களில் வினாத்தாள் கட்டு காப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குறிப்பிட்ட வழித்தடம் வழியாக தோ்வு மையங்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாக கொண்டு செல்லவும் வழி செய்யப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

SCROLL FOR NEXT