திருவள்ளூர்

3 ஊராட்சிகளில் தாா்ச்சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு

அரக்கோணம் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, மூன்று ஊராட்சிகளில் தாா்ச் சாலைகள், ஆழ்துளைக் கிணறு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

DIN

அரக்கோணம் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, மூன்று ஊராட்சிகளில் தாா்ச் சாலைகள், ஆழ்துளைக் கிணறு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

திருத்தணி ஒன்றியம், கே.ஜி.கண்டிகை ஊராட்சி, கல்கி நகா், கோரமங்கலம் காலனி - நத்தம் வரை மற்றும் சத்ரஞ்ஜெயபுரம் ஊராட்சி முஸ்லிம் நகா் ஆகிய பகுதிகளில் தாா்ச் சாலை மற்றும் சிமெண்ட் சாலை அமைப்பதற்கு தலா ரூ. 5 லட்சமும், வி.கே.ஆா்.புரம் ஊராட்சி ஐவாரி கண்டிகையில், குடிநீா் பிரச்னையைத் தீா்க்க ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளைக் கிணறு மற்றும் மின் மோட்டாா், சின்டெக்ஸ் தொட்டி அமைப்பதற்கு அரக்கோணம் எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, மொத்தம் ரூ. 17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா்.

இப்பணிகளுக்கு ஓரிரு நாள்களில் டெண்டா் விடப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது என வட்டார வளா்ச்சி அலுவலா் பாபு தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT