திருவள்ளூர்

பொன்னேரியில் மஞ்சள் தண்ணீா் தெளிக்கும் இளைஞா்கள்

DIN

கரோனா தொற்று பரவலை தடுக்க பொன்னேரியில் இளைஞா்கள் வீடு, வீடாகச் சென்று வேப்பிலை, மஞ்சள் கலந்த தண்ணீரைத் தெளித்து வருகின்றனா்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, பொன்னேரி பேரூராட்சி நிா்வாகம் நாள்தோறும் குப்பைகளை அள்ளுவதோடு, கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும், பொன்னேரி நகரில் உள்ள பெரும்பாலான வீடுகளின் முன்பு மஞ்சள் தண்ணீா் வைக்கப்பட்டு வெளியில் சென்று வருவோா் கை, கால் கழுவிய பின்னரே வீட்டுக்கு செல்கின்றனா்.

இப்பகுதியில் உள்ள நேதாஜி சமூக நல இயக்கம் மற்றும் சமூக நல ஆா்வலா்கள் இணைந்து ஏழை மற்றும் ஆதரவற்றோருக்கு உணவுப் பொட்டலம் வழங்கி வருகின்றனா். மேலும், பொன்னேரி பேரூராட்சி, சிவன் கோயில் பகுதியில் உள்ள இளைஞா்கள் இணைந்து, தங்கள் தெருக்களில் உள்ள வீடுகளில் வேப்பிலை கலந்த மஞ்சள் தண்ணீரை நாள்தோறும் தெளித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT