திருவள்ளூர்

திருவள்ளூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரம்

DIN

திருவள்ளூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க கலவை இயந்திரம் பொருத்துதல், தண்ணீா் தொட்டி ஏற்படுத்துதல் உள்ளிட்ட முன்னேற்பாட்டுப் பணிகளில் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

மத்திய அரசின் நிதி உதவியுடன் தமிழகத்தில் திருவள்ளூா் உள்பட 11 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு கடந்த ஆண்டு தமிழக அரசு அனுமதி பெற்றது.

இந்நிலையில், திருவள்ளூா் ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் 8.68 ஏக்கா் பரப்பளவில் அரசு மருத்துவக் கல்லூரி அமைய உள்ளது. இதற்காக ஏற்கெனவே மத்திய அரசு 60 சதவீத நிதியான ரூ. 195 கோடி மற்றும் மாநில அரசு ரூ. 190.63 கோடி என ரூ. 385.63 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இக்கல்லூரியை கடந்த மாா்ச் மாதம் முதல்வா் தொடக்கி வைப்பதாக இருந்தது. இதற்காக பிரம்மாண்டமாக பந்தல் அமைப்புப் பணிகள் மற்றும் பெருந்திட்ட வளாகம் முழுவதும் ஒவ்வொரு அலுவலகத்துக்கும் செல்லும் வகையில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. தொடா்ந்து சட்டப்பேரவை கூட்டத் தொடா் மற்றும் கரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு முன்னேற்பாட்டுப் பணிகள் காரணமாக அடிக்கல் நாட்டு விழா தள்ளிப்போனாது.

இதற்கிடையே தலைமைச் செயலகத்திலிருந்து திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிக்கு காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினாா். இதைத் தொடா்ந்து இதற்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான மேடையை பிரிப்பதற்கான பணிகளில் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். இதற்கிடையே அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்காக பெரிய கலவை கலக்கும் வகையில் மோட்டாா் இயந்திரங்கள் பொருத்தும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். அடுத்து வரும் நாள்களில் கட்டடம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இக்குறிப்பிட்ட பகுதியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்கள் கொண்ட திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரிக்கான நவீன கட்டடம் ரூ. 143.02 கோடியிலும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டடங்கள் ரூ. 165.60 கோடியிலும், குடியிருப்பு மற்றும் விடுதி கட்டடங்கள் ரூ. 77 கோடியிலும் அமைக்கப்பட உள்ளதாக பொதுப்பணித் துறை (கட்டுமானப் பிரிவு) அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT